மாநாடு படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கம்!

  அனிதா   | Last Modified : 08 Aug, 2019 10:51 am
actor-simbu-removed-from-maanaadu-film

மாநாடு படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கப்படுவதாக பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அரசியல் கதை களத்துடன் அதிரடி தில்லர் படமாக உருவாக்கப்பட்டு வரும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. இந்த படம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் நடிகராக நியமிக்கப்பட்ட சிம்பு குறித்த நேரத்தில் கால்ஷீட் கொடுக்காததால் படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். 

மேலும், புதிய பரிமானத்துடன் மாநாடு படம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close