தீக்குளிக்க முயன்ற அஜித் ரசிகர்... வேண்டுகோள் விடுத்த சாந்தனு பாக்யராஜ்

  கண்மணி   | Last Modified : 08 Aug, 2019 06:11 pm
ajith-fan-who-tried-to-fire

பொதுவாகவே அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களின் முதல் காட்சியை பார்த்த விடவேண்டும் என்கிற வெறித்தனமான ஆசையில் ரசிகர்கள் இருப்பது வழக்கம் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று முதல்  திரைக்கு வந்துள்ளது.

இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பிருந்தே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்திற்கான டிக்கெட்  குறித்த பிரச்னையின் போது ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதனை நேரில் பார்த்த சாந்தனு பாக்யராஜ் இந்த சம்பவம் குறித்து ட்வீட் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ரசிகர்களின் இதுபோன்ற செயலை ’தல’ உள்ளிட்ட எந்த ஹீரோக்களும் விரும்பமாட்டார்கள் என தெரிவித்துள்ளார் சாந்தனு பாக்யராஜ்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close