தேசிய திரைப்பட விருதுகள் 2019: 'அந்தாதுன்', 'உரி' பட நடிகர்களுக்கு விருது!

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 05:07 pm
national-film-awards-2019-best-actors-award

டெல்லியில் 66வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. 2018ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதில், சிறந்த நடிகர் எனும் விருதினை இருவர் பெற்றுள்ளனர். 'அந்தாதுன்' திரைப்படத்திற்காக ஆயுஷ்மான் குரானா மற்றும் 'உரி' படத்தில் நடித்ததற்காக விக்கி கவுஷல் ஆகிய இருவரும் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளனர். 

சிறந்த ஹிந்தி படமாக 'அந்தாதுன்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக 'உரி' திரைப்படம் தேர்வாகியுள்ளது.  

பிரியங்கா சோப்ராவின் தயாரிப்பான பானி(Paani) சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த திரைப்படம் என்ற விருதை வென்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close