மீண்டும் உருவெடுக்கும் 90ஸ் கிட்ஸின் பொழுதுபோக்காக  இருந்த  பாடல் புத்தகம் 

  கண்மணி   | Last Modified : 11 Aug, 2019 11:51 am
comali-movie-lyric-book

90ஸில் பிறந்த அனைவருக்கும் மிகவும் பிடித்தமான, பொழுது போக்கு என்றால், அது  திரைப்பட பாடல் புத்தகத்தில் உள்ள வரிகளை பார்த்து பாடுவது தான் . தொடுதிரை கைபேசிகள் இல்லாத காலத்தில் பல பாடகர்களை உருவாக்கிய பெருமை பாடல் வரிகளை கொண்ட புத்தகத்திற்குத்தான் என்று சொன்னால் மிகையாகாது.

இந்த புத்தகம் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லாமலேயே போய் விட்டது என்று கூட சொல்லாம். 90ஸ்கிட்ஸின் நினைவுகளில் வாழ்ந்து வரும் பாடல் புத்தகத்தை மீண்டும் உருவாக்கும் விதமாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் பாடல் வரிகளை கொண்ட புத்தகத்தை சோனி ம்யூசிக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த படம் 90ஸ் கிட்ஸின் இனிமையான வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் பாடல் புத்தகம் குறித்து ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close