பிக் பாஸ் மீரா மிதுனுக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்பு :எந்த படத்தில் தெரியுமா? 

  கண்மணி   | Last Modified : 13 Aug, 2019 01:26 pm
bigg-boss-meera-mithun-s-film-opportunity

பிக் பாஸ் ரியாலிட்டி சோவிற்கு பிரபலங்கள் வர காரணமே அந்த போட்டிக்கு பிறகு நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காகத்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக, முந்தைய சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர் தற்போது சினிமாவில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிட்டனர். 

அதன்படி பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்த மீரா மிதுனுக்கு, ’அற்புத கேமரா’ திரைப்படத்தின் இயக்குனரான நவீன் இயக்கி வரும் 'அக்னிச் சிறகுகள்' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும்  இந்த படத்தில் பிரபல நடிகர்களான விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.  மீரா மிதுன் ஏற்கனவே  8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close