தனது டெக்னிக்கல் திறமையை கொண்டு குற்றவாளிகளை துப்பறியும் ஜிவிபிரகாஷ்!

  கண்மணி   | Last Modified : 14 Aug, 2019 12:23 pm
ayngaran-official-trailer

ஒருபுறம் இசையமைப்பாளர், மறுபுறம் நடிகர் என படு பிஸியாக சுழன்றுக் கொண்டிருபவர்  ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது நடித்து வரும்  ‘ஐங்கரன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.  

இந்த ட்ரைலரில் இருந்து டெக்னிக்கல் திறமையில் சிறந்து விளங்கும் சாதாரண குடும்பத்தை  சேர்ந்த நாயகன் . தனது திறைமையை நிரூபிக்க  வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படுகிறார்.

இந்நிலையில் காவல்துறையால் துப்பறிய முடியாத குற்றச்சம்பவம் ஒன்றை கதாநாயகன் தனது திறமையை கொண்டு கண்டுபிடிக்கிறார். இதற்கிடையே அந்த இளைஞன் சந்திக்கும் பல சிக்கல்களே இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில்  ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close