மாநாடு படத்திற்கு போட்டியாக மகா மாநாடு படத்தை உருவாக்கும் சிம்பு!

  கண்மணி   | Last Modified : 14 Aug, 2019 03:29 pm
simbu-will-be-making-a-maghaa-maanaadu-movie

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அரசியல் கதை களத்துடன் அதிரடி தில்லர் படமாக உருவாக இருந்த  மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. இந்த படம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகன் இருந்தது.

இதற்கிடையே , படத்தின் நயகனாக நியமிக்கப்பட்ட சிம்பு குறித்த நேரத்தில் கால்ஷீட் கொடுக்காததால் படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.

மேலும், புதிய பரிமானத்துடன் மாநாடு படம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியிருந்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, சிம்புவின் தந்தையும் பிரபல இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்திரன் தன்னுடைய  சொந்த தயாரிப்பு நிறுவனமான ’சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் ரூபாய் 125 கோடி செலவில் ’மகா மாநாடு’ என்கிற படத்தை சிம்பு இயக்கி நடிக்கவுள்ளார்  என தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close