இன்று ரத்து செய்யப்பட்ட சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு!: என்ன காரணம் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 17 Aug, 2019 12:10 pm
sivakarthikeyan-s-shooting-canceled-today

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ  என டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு படத்தொகுப்பு - ரூபன்,  ஒளிப்பதிவு - ஜார்ஜ் , கலை - செல்வக்குமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னை அருகே  உள்ள படப்பையில் பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று பெய்துவரும் தொடர் மழையின்  காரணமாக ஹீரோ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close