பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” குறித்த முக்கிய தகவல்!

  கண்மணி   | Last Modified : 19 Aug, 2019 11:33 am
gundumotionposter-from-today-6pm

இயக்குனர் பா.ரஞ்சித்  தன்னுடைய பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தற்போது "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" படத்தை தயாரித்து வருகிறார். அட்டக்கத்தி  தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பா.இரஞ்சித்தின் உதவியாளராக இருந்த  அதியன் ஆதிரை இயக்குகிறார்.  ஆனந்தி நாயகியாக நடிக்கும் இந்த படம் லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை குறித்த கதையை மையமாக கொண்டுள்ளது 

"தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" மற்றும் "மகிழ்ச்சி" ஆகிய ஆல்பங்களின் இசையமைப்பாளர் தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆனந்தி நாயகியாக நடிக்கும் இந்த படம் லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை குறித்த கதையை மையமாக கொண்டுள்ளது.

மேலும் ரஜினியின் "கபாலி", " காலா" ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார் . இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close