போனி கபூர் தயாரிக்கும் பயோபிக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்!

  கண்மணி   | Last Modified : 19 Aug, 2019 03:30 pm
keerthi-suresh-makes-his-debut-in-bollywood-movie

சமீபத்தில் திரைக்கு வந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துள்ள போனி கபூர். இந்த படத்தை தொடர்ந்து பிரபல கால்பந்து வீரர் சையத் அப்துல் ரஹீம் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்ட படத்தை தயாரிக்கிறார்.

அமித் ஷர்மா இயக்கும் இந்த படம் 1950-1963 வரை இந்திய கால்பந்து அணியின்  சாதனைகளை போற்றும் வகையில் உருவாகவுள்ளதாம். இந்த படத்தில் அஜய் தேவ்கன் நாயகனாகவும், நடிகை  கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.  ‘மைதான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளதுடன், டைட்டில் லுக் போஸ்ட்டரும் வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close