மிரட்டும் 'மிரட்சி' : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரைலர் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 22 Aug, 2019 02:32 pm
first-look-and-teaser-of-miratchi

நடிகர் ஜித்தன் ரமேஷ், ஈனா சஹா, ஷ்ரத்தா தாஸ், சாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் "மிரட்சி". உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை  எம்.வி.கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார்.

மேலும் ஓகே கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஜி. நாகார்ஜுனா ரெட்டி என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆனந்த் என்பவர் இசையமைத்து வருகிறார். காதல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் மற்றும் டீசரை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

எதிரிகளால் கடத்தப்படும் நாயகி, கழுத்தில் தூக்கு மாட்டப்பட்ட நிலையில், ஐஸ் கட்டிகளின் மீது நிற்க வைக்கப்படுகிறார். அந்த ஐஸ் கட்டி உருகுவதற்குள் நாயகன் அதிரடியாக நுழைந்து நாயகியை காப்பாற்றுவாரா?  அல்லது நாயகன் வருவதற்குள் நாயகியின் உயிர் பிரியுமா? என்னும் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தும் வண்ணம் இந்த டீசர்  உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close