மாலைக்கண் நோயால் பாதிக்கப்படும் வைபவ்: இயக்குனர் வெளியிட்ட ட்ரைலர்!

  கண்மணி   | Last Modified : 22 Aug, 2019 06:21 pm
sixer-movie-trailer-released-by-a-r-murugadoss

வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார்.  இந்த படத்திற்கு  ஜிப்ரான் இடிசையமைத்துள்ளார். அதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 'எங்க ஏங்கவேனா கொஞ்சிக்க' என்னும் பாடலை பாடியுள்ளார்.

இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில்  இந்த படத்தின்  ட்ரைலரை இயக்குனர் ஏ. ஆர் . முருகதாஸ்  வெளியிட்டுள்ளார்.  இந்த ட்ரைலரின் படி மாலை கண் நோயால் பாதிக்கப்பட்ட நாயகன் எவ்வாறு தனது குறையை மறைத்து சக மனிதர்களுடன் பழகுகிறார் என்பதையும், இதனால் நாயகன் சந்திக்கும் பிரச்னைகளையும் நகைச்சுவை கலந்த கதை களத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close