மதம் மாறினாரா நடிகர் சூர்யா? வீடியோவால் பரபரப்பு  

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2019 03:32 pm
actor-surya-converted-to-islam

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யாவுக்கு, முஸ்லீம் வழிபாட்டுத்தளத்தில் மரியாதைகள் செய்யப்படும் காட்சிகளும், அவர் அங்கு வணங்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம், அவர் இஸ்லாம் மதத்தை தழுவியதாகவும், சம்சுதீன் என தன் பெயரை மாற்றிக்கொண்டதாகவும் அந்த வீடியோவுடன் தகவலும் பரப்பப்படுகிறது. 

 <>

எனினும், சில வருடங்களுக்கு முன் இதே வீடியோ பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, சூர்யா தரப்பில் இச்செய்தி வெறும் வதந்தியே என மறுக்கப்பட்டது. சிங்கம் 2 படப்பிடிப்பின் போது ஐராபாத் சென்றிருந்த நடிகர் சூர்யா, அங்குள்ள தர்காவிற்கு சென்றதாகவும், அங்கே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் அவர் தரப்பில் அப்போதே விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அதே வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close