பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் என்னை கொடுமைப்படுத்தினர்: மதுமிதா காவல் நிலையத்தில் புகார்!

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 08:39 pm
bigg-boss-madhumitha-complaint-against-bb-contestants-vijay-tv

 பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் மதுமிதா விஜய் டிவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இன் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா சில வாரங்களுக்கு முன்பாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறி அவர் செயல்பட்டதால் வெளியேற்றப்பட்ட தாக காரணம் தெரிவிக்கப்பட்டது.

வெளியே வந்த அவர் விஜய் டிவி நிர்வாகி ஒருவரிடம், 'சம்பள பாக்கியை விரைவில் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்' என மெசேஜ் அனுப்பியதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த புகார் பொய்யானது என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மதுமிதா நாசரேத் பேட்டை காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் அளித்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப் படுத்தியதாகவும், இதனை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலஹாசன் கண்டிக்கவில்லை என்றும், தான் மன உளைச்சலுக்கு ஆளாகி, வலுக்கட்டாயமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close