நடிகர், இயக்குநர் ராஜசேகர் காலமானார்

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2019 12:52 pm
actor-and-director-rajasekhar-has-passed-away

பாலைவனச் சோலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ராஜசேகர் பாரதிராஜாவின் முதல் படமான நிழல்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற ’இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலின் இவர் மிகவும் பிரபலமானார்.

சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உள்ளிட்ட திரைப்படங்களையும் ராஜசேகர் இயக்கியுள்ளார். இவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜசேகரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close