இந்த வருட இறுதியில் தமிழ் மொழியில் வெளியாகவுள்ள தபாங் 3!

  கண்மணி   | Last Modified : 11 Sep, 2019 11:59 am
dabangg3-movie-update

2009ல் சல்மான் கான் நடிப்பில் திரைக்கு வந்த 'வான்டட்’ படத்தை இயக்கியிருந்தார்  பிரபுதேவா.  அதனையடுத்து 10 வருடங்களுக்கு பிறகு, தபாங் 3 திரைப்படத்தின் மூலம் மீண்டும் சல்மான் கானை நாயகனாக வைத்து  `தபாங் 3' என்னும் திரைப்படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார்.  `தபாங் 3’ படத்தின் படப்பிடிப்பு, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தின் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா  நடித்து வருகிறார். 

இந்நிலையில் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள தபாங் 3 படத்தினை தமிழகத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடும் உரிமையை கே.ஜே. ஆர் ஸ்டூடியோஸ் பெற்றுள்ளது. மேலும் தபாங் படத்திற்கு தமிழகத்திலும் வரவேற்பு உள்ளதால், தபாங் 3 படத்தினை தமிழில் டப்பிங் செய்து வெளியிட கே.ஜே. ஆர் நிறுவனம் பணிகளை துவங்கியுள்ளது.  இந்த தகவலை கே.ஜே. ஆர் நிறுவனம்  தங்களுடைய  ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

— KJR Studios (@kjr_studios) September 11, 2019

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close