’தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது: ரஜினிகாந்த் 

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 09:39 pm
dharbar-movie-releases-pongal-rajinikanth

’தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் ’தர்பார்’. மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான பர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி, தற்போது அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ’தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்றும், படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று வெளியான இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் 2020 பொங்கலுக்கு தர்பார் ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close