ஜெ.வெப் சீரீஸ் இயக்குநருக்கு எதிராக வழக்கு தொடர்வோம்: தீபக்

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 10:15 am
we-will-sue-the-web-series-director-deepak

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக வழக்கு தொடருவோம் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் மனதில் நீங்காதா மாபெரும் வெற்றி நாயாகியாவே வாழ்ந்துவருகிறார். இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க பல இயக்குநர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரீஸ் ஆக எடுக்க தீவிரம் காட்டி வருகிறார். இதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக வழக்கு தொடருவோம் என கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றி  இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு என்ன தெரியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close