சாஹோ படத்தின் வசூல் குறித்து வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

  கண்மணி   | Last Modified : 13 Sep, 2019 01:43 pm
saaho-movie-collects-424cr-in-2-weeks-worldwide

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'.  இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள  இந்தப்படம் கடந்த  ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு வாரத்தில் சுமார் 424 கோடியை வசூலாக பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close