பேனர், கட் அவுட்டுக்கு பதில் ஹெல்மெட்: கலக்கும் பிரபல நடிகரின் ரசிகர்கள்

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2019 10:07 am
banner-helmet-in-response-to-the-cut-out-fans-of-the-popular-actor-mixing

சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும்போது 200 ஹெல்மெட் வழங்கப்படும் என்று அவரது ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.

நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன், சூர்யா ரசிகர்கள் பேனர், கட் அவுட்டுக்கு பதிலாக ஹெல் மெட் வழங்குங்கள். இதை செய்பவர்களே உண்மையான காப்பான் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  நெல்லை மாவட்ட சூர்யாவின் ரசிகர்கள், துணை ஆணையர் அர்ஜூன் சரவணனின் கோரிக்கையை ஏற்று, சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும்போது 200 ஹெல்மெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close