ரஜினி பட டைட்டிலுடன் உருவாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் !

  கண்மணி   | Last Modified : 15 Sep, 2019 02:19 pm
nayanthara-s-65th-film-is-netrikann

இயக்குனர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மிலிந்த் ராவ் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு  கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.  அதோடு  லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்க, கமலநாதன் கலை இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் உருவாகும் திரில்லர் படமான இதன் டைட்டில் போஸ்ட்டர் இன்று வெளியாகியுள்ளது. இதன் படி இந்த படத்திற்கு ரஜினி நடிப்பில் கடந்த  1981ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி நடைபோட்ட படமான ’நெற்றிக்கண்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close