பிகில் திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை!

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 03:43 pm
the-release-date-of-the-bigil-movie-is-not-confirmed

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் அக் 27ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பட வெளியீட்டு தேதியை பற்றி வதந்திகளைப்பரப்ப வேண்டாம். படம் சென்சார் ஆன பிறகே அது பற்றி அறிவிப்போம் என தெரிவித்துள்ளார். 27ஆம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் படத்தை அன்று ரிலீஸ் செய்தால், முதல் நாள் மட்டுமே அதிக வசூல் பெறும் என்றும் 24 ஆம் தேதி  ரிலீஸ் செய்தால் அதிக வசூல் பெறலாம் எனவும் பட திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close