நடிகர் விஜய்-க்கு கமல்ஹாசன் ஆதரவு! எதற்குத் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 08:45 am
kamal-haasan-supports-vijay

சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் நடிகர் விஜய் பேசியதற்கு கமலஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் சாலையில் பேனர் விழுந்து பலியானார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று சென்னையில் நடைபெற்ற பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் லாரி ஓட்டுனர் மீதும் அந்த பேனரை உருவாக்கியவர் மீதும் பழி போடுகிறார்கள் என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் சுபஸ்ரீ விவகாரத்தில் நடிகர் விஜய் கூறிய கருத்துக்கு கமலஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக விஜய் பயன்படுத்தி இருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close