குண்டு படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல்!

  கண்மணி   | Last Modified : 21 Sep, 2019 01:11 pm
nilamellam-lyric-video-from-sept-23rd

கபாலி, காலா என சூப்பர்ஸ்டாருடன் இரண்டு தொடர் வெற்றிப் படங்களைத் வழங்கிய பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் பா.ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். 

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என ன பெயரிடப்பட்டுள்ளது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். ரித்விகா, அனேகா, ராமதாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் தென்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்; கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிளாக ’நிலமெல்லாம்’ என்னும் பாடல் வரும் 23ம் தேதி வெளியாகவுள்ளது.

 

— Neelam Productions (@officialneelam) September 21, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close