மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்திக்கு இமானை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா வாய்ப்பு?

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 11:13 pm
ar-rahman-yuvanshankar-raja-chance-for-singar-thirumurthi

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்திக்கு இசையமைப்பாளர் டி.இமான் பாட வாய்ப்பளித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா ஆகியோரும் வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி, அஜித் நடித்த ’விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணானே கண்ணே’ என்ற பாடலை பாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அது வைரலானது. இந்த பாடலுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

இந்த வீடியோ மூலம் பிரபலாமான திருமூர்த்திக்கு  இசையமைப்பாளர் டி.இமான் பாட வாய்ப்பளிப்பதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, திருமூர்த்திக்கு ஏ.ஆர்.ரகுமான், யுவன்சங்கர் ராஜா ஆகியோரும்  பாட வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள முகுந்தன் என்பவரும் அவரது ஆல்பத்தில் பாட வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர்கள் திருமூர்த்தியின் பாடல் வீடியோக்கள் மற்றும் விவரங்களை கேட்டுள்ளனர்.

பாடகர் திருமூர்த்திக்கு இசையமைப்பாளர் டி.இமான் வாய்ப்பளித்த நிலையில் மேலும் பலர் வாய்ப்பளிக்க முன்வந்துள்ளதால், திருமூர்த்திக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close