வாழ்த்துகள் மிஸ்டர் அமிதாப் ஜி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 10:44 am
congratulations-mr-amitabh-g-superstar-rajinikanth

’தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது எனவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமிதாப் பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில், ’வாழ்த்துகள் மிஸ்டர் அமிதாப் ஜி! இந்த பாராட்டதக்க மரியாதைக்கு நீங்கள் தகுதியானவர்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அமிதாப் பச்சனுக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1996 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் ’தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close