சிவாஜி ரசிர்கள் கண்டனம்: விவேக் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 01:20 pm
shivaji-fans-condemn-vivek-s-explanation

’நெஞ்சில் குடி இருக்கும்’ வார்த்தையை விஜய் கூறும்போது மந்திர சக்தி வார்த்தையாக உள்ளதாக தான் தெரிவித்தேன் என்று, நடிகர் திலகம் சிவாஜியை அவமதித்ததாக சிவாஜி பேரவை நடிகர் விவேக்கிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் இவ்வாறு விளக்கம் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ’பிகில்’ திரைப்பட ஆடியோ விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விவேக், இரும்புத்திரை படத்தில் சிவாஜி பாடிய ’நெஞ்சில் குடி இருக்கும்’ பாடல் காதல் உணர்வைத் தந்ததாகவும், விஜய் அந்த வார்த்தையை கூறும்போது அது மந்திர சக்தி வார்த்தையாக உள்ளது என்று பேசினார்.

இதையடுத்து, சிவாஜியை அவமதித்து பேசியதாக சிவாஜி பேரவை சார்பில் நடிகர் விவேக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விவேக் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில், ‘1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோதர்ர் விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க’ என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close