புது வரவு : இந்த வாரம் 4 படங்கள்

  பால பாரதி   | Last Modified : 03 May, 2018 03:12 pm

கெளதம் கார்த்திக்கின் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’, அல்லு அர்ஜுனின் ’என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’, சச்சின் மணி - நந்திதாவின் ‘காத்திருப்போர் பட்டியல்’, ’கல்லூரி’அகில் - அனு கிருஷ்ணாவின் ’அலைபேசி’ என நான்கு படங்கள் இந்த வாரத்தில் புது வரவாக இருக்கின்றன.

இருட்டு அறையில் முரட்டு குத்து : ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான ’இருட்டு அறையில் முரட்டு குத்து’படத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சாரா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். ஒரு பாடலுக்கு நடிகர் ஆர்யா நடனமாடியிருக்கிறார். ’அடல்ட் காமெடி வகையை சேர்ந்த இந்தப் படம் முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் மோடில் இருப்பதால் இதில், மெசேஜ் எதுவும் எதிர்பார்த்து வராதீர்கள்!’என படக்குழுவினரே அறிவித்துவிட்டதால், ஜாலி மூடில் போய் படத்தைப் பார்ப்பது சிறப்பு!

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா : சமீபகாலமாக தென்னிந்திய மொழி நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவை குறிவைத்து களம் இறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக, தெலுங்கு ஹீரோக்களின் வரவு தான் அதிகமாக உள்ளது.‘பாகுபலி’ ஹிட்டுக்குப் பிறகு பிரபாஸ்,‘அர்ஜுன் ரெட்டி’விஜய் தேவரகொண்டா ஆகியோர் வரிசையில், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் படம் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’. தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தனக்கென ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ராணுவ வீரனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருக்கிறார். தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் சரத்குமார்,‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், நதியா, சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

காத்திருப்போர் பட்டியல் : டிரீம் சினிமாஸ் தயாரிப்பில், ஆறிமுக இயக்குநர் பாலய்யா டி.ராஜசேகர் இயக்கத்தில், கலகலப்பான ரெயில் பயண கதையாக உருவாகி இருக்கும் படம்‘காத்திருப்போர் பட்டியல்’. சச்சின் மணி நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நந்திதா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், அருண் ராஜா காமராஜ், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஷியான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்பவர்கள் வாழ்க்கையை காமெடி கலந்து சொல்லும் இந்தப் படத்தில் ரெயில் பயணத்தில் நடக்கும் காதல், ரெயில்வே போலீசார் அதிரடி, பயணிகள் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி பேசுகிறது இந்தப் படம்.

அலைபேசி : விஜய லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ராமச்சந்திரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முரளி பாரதி இயக்கியிருக்கும் படம் ’அலைபேசி’. இதில்,’கல்லூரி’ அகில் நாயகனாகவும், அனு கிருஷ்ணா னாயகையாகவும் நடித்திருகின்றனர். இவர்களுடன் சின்கம் புலி, அனு மோகன், கானா பாலா, சாந்தி ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். செல்போன்களால் வரும் விபரீதத்தைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close