இணையத்தால் சீரழியும் இளைய சமூகம் குறித்த படமே பப்பி?

  கண்மணி   | Last Modified : 26 Sep, 2019 08:42 pm
puppy-trailer

இளைய சமூகத்தின் மன நிலையை எடுத்துக்காட்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள ’பப்பி’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இரண்டு இளைஞர்களிடம் வளரும் ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் கூடிய படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முரட்டு சிங்கிள் என்னும் இயக்குனர். இந்த படத்திற்கு ’பப்பி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

போகன், நெருப்புடா,  நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கன்னட மொழி நடிகையானவும் சம்யுதா ஹெக்டே நாயகியாகவும், நடிகர் யோகி பாபு நாயகனின் நண்பராகவும் நடிக்கின்றனர்.  

வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரின் மூலம்  ’இளம் பெண்களை கண்டு ஆசை கொள்ளும் வாலிபர்கள் சந்திக்கும்  சமூக பிரச்னைகளை காண்பிக்கும் விதமாக இந்த படத்தின் கதை உருவாகியுள்ளதாக தெரிகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close