கார்த்திக்கின் படப்பிடிப்பிற்கு தடை ஏற்படுத்திய அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் தயாரிப்பு நிறுவனம்!

  கண்மணி   | Last Modified : 26 Sep, 2019 10:05 pm
production-company-condemning-kartik-s-shooting-ban

ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், மலைக்கோட்டை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  இதன் படப்பிடிப்பின் போது சில அமைப்புகள்   படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  இந்த படம்  வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். அதோடு இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 26, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close