மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை;ஒரு கும்பல் தவறாக பிரசாரம் செய்கிறது: பிரபல சினிமா தயாரிப்பாளர் 

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 03:04 pm
the-central-government-does-not-impose-hindi-but-a-mob-misrepresents-a-famous-filmmaker

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூரில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ‘மத்திய அரசு இந்தி மொழி திணிப்பதாக தெரியவில்லை; மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறில்லை. பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம்; ஒரு மொழியால் இன்னொரு மொழி அழியும் என ஒரு கும்பல் தவறாக பிரசாரம் செய்து வருகிறது. 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரியவில்லை; அதற்கு மொழியும் ஒரு காரணம். பிரதமர் நரேந்திர மோடி பேச்சை மொழி மாற்றம் செய்ய உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்’ என்று பேசியுள்ளார். 

 நடிகர் கமல்ஹாசன், தனது தயாரிப்பில் படம் நடித்து தருவதாக கூறி, வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை என்று, கமல் மீது, தயாரிப்பாளார் சங்கத்தில், ஞானவேல் ராஜா, நேற்று புகாரளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newsmtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close