கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கவே புகார்: ராஜ்கமல் பிலிம்ஸ்

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 06:21 pm
kamal-s-reputation-is-tarnished-rajkamal-films

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பணம் அளித்ததாக கூறும் புகாரில் உண்மையில்லை என்று, நடிகர் கமல்ஹாசன் தரப்பில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

‘உத்தம வில்லன்’ திரைப்படம் வெளியாக  ரூ.10 கோடி கொடுத்தால் படம் தயாரிக்க கால்ஷீட் தருவதாக கமல் கூறியதாகவும், இதனால் அவருக்கு தான் ரூ.10 கோடி கொடுத்ததாகவும்,ஞானவேல்ராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஞானவேல்ராஜா புகாருக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ‘ ஞானவேல் ராஜா பணம் அளித்ததாக கூறும் புகாரில் உண்மையில்லை. நடிகர் கமலுக்கு அவர் எந்த பணமும் வழங்கவில்லை. கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஞானவேல்ராஜா புகாரளித்துள்ளார். கமலின் புகழை கெடுக்க நடைபெறும் விவகாரத்தை சட்டரீதியாக சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close