கமல் சம்மதம் தெரிவித்தால் ‘தேவர் மகன்-2’ எடுப்பேன்: இயக்குநர் சேரன் 

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 10:17 pm
if-kamal-agrees-i-will-take-the-thevarmagan-2-director-cheran

நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தால் ‘தேவர் மகன்-2’ திரைப்படத்தை எடுப்பேன் என்றும், பிக்பாஸில் கலந்து கொண்டதை அவமானமாக கருதவில்லை என்றும் இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டு 91 நாட்களில் வெளியேறிய திரைப்பட இயக்குநர் சேரனுக்கு சென்னையில்  ‘வெல்கம் டூ சேரன்’ என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன், ‘நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நடிகர் விஜய்சேதுபதியே காரணம் ஆவார். பிக்பாஸில் கலந்து கொண்டதை அவமானமாக கருதவில்லை. இந்த நிகழ்ச்சியில் துளியும் கூட ஸ்கிரிப்ட் இல்லை. விரைவில் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளேன். நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தால்  ‘தேவர் மகன்-2’ திரைப்படத்தை எடுப்பேன்’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close