தளபதியுடன் நடிப்பது ஹேப்பி அண்ணாச்சி: வில்லன் விஜய் சேதுபதி

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 10:55 pm
happy-to-associated-with-thalapathyvijay-sir

நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும்  'பிகில்’ வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.  ‘விஜய் 64’ என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற ஒரு தகவல் கசிந்து வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, ‘விஜய் 64’ படத்தில் விஜய்சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய்யுடன் நடிப்பது குறித்து விஜய்சேதுபதி ட்விட்டரில்,  ‘நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லலித்குமாருக்கு ஸ்பெஷல் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் ஷீட்டிங் இம்மாதம் தொடங்கவுள்ளது. 2020 ஏப்ரலில் வெளியாகவுள்ளது. 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close