தல 60 படத்தில் அஜித்தின்  தோற்றம் எப்படி இருக்கும் தெரியுமா? மாஸ் அப்டேட் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 01 Oct, 2019 10:53 am
thala-60-movie-update

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித்.  இந்தபடத்தை வினோத் இயக்குகிறார்.

தல 60 படத்தின் மேலும் ஒரு சுவாரசிய தகவலாக அஜித்திற்கு மிகவும் பிடித்த பந்தயமான கார் பந்தய வீரராகவே இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் அஜித்.  பெரும்பாலும் தென்னாப்ரிக்கா உள்ளிட்ட வெளி  நாடுகளில் படப்பிடிப்பு  நடத்தப்பட உள்ள இந்த படத்தில் வில்லனாக நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

 இதற்கிடையே எப்போது போல் சால்ட் அன்ட் பேப்பர் தோற்றத்தில் அல்லாமல் அஜித் மிகவும் இளமையான தோற்றத்துடன், கருப்பு முடியுடனமும் தோன்றவுள்ளாராம். மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக ஜிம் ஒர்கவுட் செய்து வரும் அஜித்தை  முற்றிலும் வேறொரு தோற்றத்துடன் 'தல அஜித்' படத்தில் பார்க்கலாம் என தெரிகிறது .இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close