வைரலாகும் அக்னி சிறகுகள் படக்குழுவினர் புகைப்படம்!

  அனிதா   | Last Modified : 03 Oct, 2019 03:33 pm
the-photo-in-agni-siragugal-movie-team

அக்னிச்சிறகுகள் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ள படக்குழுவினரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இயக்குநர் நவீன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அருண்விஜய் உள்பட பலர் நடிக்கும் படம் 'அக்னிச்சிறகுகள்'. அதிரடி ஆக்‌ஷன், சேஸிங் பயணமாக உருவாகும் இந்தப் படத்தின் திரைக்கதை இஸ்தான்புல் பகுதியில் துவங்கி நார்வே மலைப்பகுதிகளில் முடிகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

— Kollywood Cinema (@KollywudCinema) October 3, 2019

 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close