‘ஒத்த செருப்பை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்’

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 06:50 pm
oththaseruppu-movie-send-to-oscar-award

‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்க வேண்டும் இயக்குநர்  ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ‘பார்த்திபனின்  ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  ‘கல்லி பாய்’ திரைப்படம் வெளிநாட்டு படத்தில் இருந்து உருவானது. அந்த படத்தை வெளிநாட்டு விருதுக்கு அனுப்பி வைப்பது இந்தியாவிற்கே அவமானம். மக்கள் பார்க்க வரும்போது சிறிய பட்ஜெட் படங்களை திரையில் இருந்து எடுப்பது கண்டிக்கத்தக்கது. திரையரங்கில் இருந்து ஒத்த செருப்பு திரைப்படத்தை எடுப்பது கொலைக்கு சமமானது. பெரிய படம், சிறிய படம் வெளியாவதில் வரையறைகள் உருவாக்கப்பட வேண்டும்’ என்றார்.

மேலும், மணிரத்னம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ததற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும், தனிமனிதர் தொடர்ந்த வழக்குதான்; மணிரத்னத்திற்கு எங்கள் ஆதரவு உண்டு என்றும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close