சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின்  ‘ஒத்த செருப்பு’

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2019 02:06 pm
parthiban-othaserupu-at-international-film-festival

கோவாவில் நடைபெறும் 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு, பார்த்திபன் நடித்து, இயக்கிய  ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் செல்கிறது. 

50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி நடைபெறும் என்றும்,திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 26 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதாகவு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு, தமிழில் இருந்து     பார்த்திபன் நடித்து, இயக்கிய  ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் செல்கிறது. ஒருவர் மட்டுமே நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ள இப்படம் கடந்த மாதம் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு  ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடக்காமல்போனது.மேலும், தமிழில் இருந்து  ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளன. 

மலையாளத்தில் இருந்து  ‘உயரே’,  ‘ஜல்லிக்கட்டு’, கோலாம்பி உள்ளிட்ட படங்களும், ஹிந்தியில் உரி, கல்லி பாய், சூப்பர் 30, பதாய் ஹோ உள்ளிட்ட படங்களும்  சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close