நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி படப்பிடிப்பின்போது மாரடைப்பால் காலமானார்!

  அனிதா   | Last Modified : 07 Oct, 2019 12:37 pm
comedian-krishnamurthy-passes-away-after-a-heart-attack

குமுளியில் படப்பிடிப்பின் போது நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. சினிமா துறையில் ஆரம்ப காலத்தில் புரெட்க்ஷன் மேனஜராக இருந்த இவர், பின்னர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன்  பல படங்களில் இணைந்து நடித்து நகைச்சுவை நடிகராக பிரபலமானார். குறிப்பாக தவசி படத்தில் வடிவேலுவிடம் ஒசாமா பின்லேடனின் அட்ரஸ் கேட்டு பிரபலமானவர். நான் கடவுள் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். 

குமளி அருகே வண்டிபெரியாறில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் படப்பிடிப்பு நடந்தபோது கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close