கதாசிரியர் கலைஞானத்திற்கு ரூ.45 லட்சம் மதிப்புடைய வீடு வழங்கினார் ரஜினிகாந்த்!

  அனிதா   | Last Modified : 07 Oct, 2019 01:11 pm
rajinikanth-gives-home-to-kalaignanam

தன்னை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய கதாசிரியர் கலைஞானத்திற்கு ரூ.45 லட்சம் மதிப்புடைய வீட்டை நடிகர் ரஜினிகாந்த் இன்று வழங்கினார். 

பைரவி படத்தின் மூலம்  ரஜினியை  முதன்முதலாக ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கதாசிரியர் கலைஞானம். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதி ராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், சொந்த வீடின்றி இருக்கும் கலைஞானத்துக்கு வீடு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி இன்று சென்னை விருகம்பாக்கம் விநாயகம் தெருவில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட வீட்டை கலைஞானத்திற்கு வழங்கி கௌரவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close