‘ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கர்வம் இல்லாத நடிகர்’

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 02:50 pm
rajinikanth-in-the-tamil-film-actor-who-is-not-proud

தமிழ் சினிமாவில் கர்வம் இல்லாத நடிகர்,  நடிகர் ரஜினிகாந்த் என்று கதாசிரியர் கலைஞானம் புகழாரம் சூட்டியுள்ளார்.

தன்னை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய கதாசிரியர் கலைஞானத்திற்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள வீட்டை நடிகர் ரஜினிகாந்த் இன்று வழங்கினார். கடந்த ஆகஸ்ட் மாதம் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கலைஞானத்திற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், சொந்த வீடின்றி இருக்கும் கலைஞானத்துக்கு வீடு வழங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், ரஜினிகாந்த் கூறியபடியே, இன்று சென்னை விருகம்பாக்கம் விநாயகம் தெருவில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வீட்டை கலைஞானத்திற்கு வழங்கி கௌரவித்தார். 

இந்த நிலையில், தனியார் சேனலுக்கு ரஜினிகாந்த் குறித்து பேட்டியளித்த கதாசிரியர் கலைஞானம், ‘பைரவி திரைப்படத்தில் எப்படி பாத்தேனோ அதே போலவே தற்போதும் ரஜினிகாந்த் இருக்கிறார். தமிழ் சினிமாவில் கர்வம் இல்லாத நடிகர்,  நடிகர் ரஜினிகாந்த் ஆவார்’ என்றார்.

மேலும், கட்டாயத்தின் பேரிலேயே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகவும், தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ரஜினிகாந்த் நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும் கதாசிரியர் கலைஞானம் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close