"எங்கள் விலங்குகள் கூட போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன: நடிகை  பதிவிட்ட சுவாரஸ்ய வீடியோ பதிவு 

  கண்மணி   | Last Modified : 08 Oct, 2019 01:30 pm
even-our-animals-obey-traffic-rules-interesting-video-recording-posted-by-the-actress

பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜி ஜிந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவிட்டு ''பயணம் செய்யும் போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது உங்களுக்கு கடினமாக இருந்தால், விலங்குகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், "எங்கள் விலங்குகள் கூட போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன'' என கருத்திட்டு ஒன்பது வினாடி கிளிப்பிங்கை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் ட்ராபிக் சிக்னலுக்காக காத்திருக்கும் வாகனங்களுக்கு இடையே ஒரு மாடும் சிக்கனலை கவனித்தபடி நிற்கிறது. பின்னர் பச்சை விளக்கு எரிந்தவுடன் அந்த மாடு சாலையை கடக்கும் காட்சிகள் இடம் பிடித்துள்ளது. இந்த பதிவு சுமார் 56,000 தடவைகள் பார்க்கப்பட்டது. ப்ரீத்தி ஜி ஜிந்தாவின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடமிருந்து 6,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close