சிம்பு மீது புகார் கொடுக்கவில்லை: ஞானவேல் ராஜா மறுப்பு 

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 07:09 pm
did-not-complain-on-the-simbu

நடிகர் சிம்பு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன  ‘முஃப்தி ’படத்தின் தமிழ் ரீமேக்கான  ‘மஃப்டி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் சிம்பு, அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அந்த செய்திக்கு ஞானவேல் ராஜா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ நடிகர் சிம்பு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவில்லை. ‘மஃப்டி’ படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லை என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது’ என்று ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close