எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன: பிரபல நடிகை

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2019 09:41 pm
me-and-jayalalithaa-have-many-similarities-famous-actress

ஜெயலலிதாவிற்கும் தனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் “தலைவி” திரைப்படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், ‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நடுத்தர குடும்பத்தில் இருந்து, 16  வயதில் சினிமாவிற்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என நிறைய ஒற்றுமை உள்ளன. ஜெயலலிதா முதலமைச்சராவது வரையிலான காட்சிகள்  “தலைவி” திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும்’ என்றார்.

மேலும், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை, சினிமாவில் மட்டும் அரசியல் படங்கள் நடிப்பேன் என்றும், தலைவி திரைப்படத்திற்காக தமிழ் மொழி கற்று வருவதாகவும் கங்கன ரனாவத் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close