நடிகர் சங்க தேர்தல் செல்லாது: தமிழக அரசு

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2019 05:44 pm
actor-association-election-invalid-government

சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதம் செய்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடைபெறவில்லை; சட்டப்படி நடைபெறாத நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று தமிழக அரசு வாதம் செய்தது. மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை என்றும், நடிகர் சங்கத்தில் பதவிக்காலம் முடிந்த நிர்வாகிகளுக்கு 6 மாதம் பதவி நீட்டிப்பு செய்ய சட்டத்தில் இடம் என்றும் அரசு வாதிட்டது.

இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு அக்டோபர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close