‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2019 09:44 pm
bigil-in-the-movie-tomorrow-s-verdict-in-the-case-against

‘பிகில்’ திரைப்படத்திற்கு வெளியிட தடைகோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. 

தனது கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டதாக உதவி இயக்குநர் கே.பி.செல்வா, இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியவுடன் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடருந்திருந்தார். பணம் பறிக்கவும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டதாக அட்லீ தரப்பு வாதாடியது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் நாளை தீர்ப்பளிக்க உள்ளார்.

அட்லீ இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள ‘பிகில்’ திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close