தீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 01:45 pm
no-permission-for-special-shows-in-diwali-minister

பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்துக்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்துக்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அரசு அனுமதியின்றி சிறப்புக்காட்சிகள் ஒளிபரப்பினால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், சிறப்புக்காட்சிக்கு இதுவரை யாரும் அனுமதி கேட்கவில்லை என்றும் அனுமதி கேட்டால், விதிமுறைகளை விளக்கி அனுமதி தருவோம் எனவும் குறிப்பிட்ட அவர்,  சிறப்பு காட்சிக்கு அனுமதி தந்த பிறகு தான் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close