‘பிகில்’ திரைப்பட சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2019 10:22 pm
bigil-movie-special-show-govt-permission

தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள  ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுத்தது குறித்து தனியார் சேனலுக்கு பேட்டியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘நாளை ஒருநாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதித்த கட்டணத்தையே வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதால் அனுமதி தரப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது’ என்றார்.

இதையடுத்து, ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு கொடுத்ததற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் நன்றி தெரிவித்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close