கார் விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகர் !

  கண்மணி   | Last Modified : 29 Oct, 2019 01:02 pm
actor-died-in-car-accident

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் மனோ. இவர் புழல்  என்கிற படத்தில் மூன்று நாயகர்களுடன் ஒருவராக நடித்திருந்தார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் மனோ. இவர் புழல்  என்கிற படத்தில் மூன்று நாயகர்களுடன் ஒருவராக நடித்திருந்தார். அதோடு பல திரைப்படங்களில் கேரக்ட்டர் ரோலிலும் நடித்துள்ளார். இவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், லிவியா என்னும் மனைவியும் உள்ளனர். இந்நிலையில் மனோ  தன்னுடைய மனைவியுடன் அம்பத்தூர் நோக்கி  நேற்றிரவு காரில் பயணித்து கொண்டிருந்த பொழுது திடீரென கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மனோ  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் . படுகாயத்துடன் மீட்கப்பட்ட மனோவின் மனைவி லிவியா அவசர சிகிச் சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close