பிரபல நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் மரணம்!

  அனிதா   | Last Modified : 31 Oct, 2019 04:12 pm
actress-geethanjali-dies-of-heart-attack

பழம்பெரும் நடிகையான கீதாஞ்சலி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் திரையுலகில் 1962 ஆம் ஆண்டு சாரதா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீதாஞ்சலி. தொடர்ந்து வாழ்க்கை படகு, ஆசை முகம், அதே கண்கள், தெய்வத்தின் தெய்வம், நெஞ்சிருக்கும் வரை  உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் முன்னணி கதாநாயகருடன் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close